ராணிப்பேட்டை சிப்காட்டில் புதிய ஒருங்கிணைப்பு ஆலை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.!
ராணிப்பேட்டை சிப்காட்டில் புதிய ஒருங்கிணைப்பு ஆலை துவங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டும் பணிகளை துவங்கி வைத்தார்.
ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் தொழிற்சாலை பகுதியில், இன்று புதியதாக ஆலை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது . இந்த நிகழ்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டார். மேலும் முக்கிய அதிகாரிகளும் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை சிப்காட் ஆலையில் புதியதாக திறக்கப்படும் ஆலையானது, திரவ மருத்துவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன், திரவ ஆர்கான் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த ஆலை அமைக்கப்பட உள்ளது. தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இந்த தொழிலக மற்றும் மருத்துவ உற்பத்தி ஆக்சிசஜன் உற்பத்தி ஆலை துவங்கப்பட உள்ளது.