இன்று மாலை ஆளுநரை சந்திக்கும் முதல்வர்.. 7 பேர் விடுதலை குறித்து பேச வாய்ப்பு?
சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேசுகிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. இதன் காரணமாக 7 விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு தமிழக அரசு கோப்புகளை சமர்ப்பித்த நிலையில், ஆளுநர் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசவுள்ளார்.
ஆளுநர் – முதல்வர் இடையே இன்று மாலை நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், நிவார் புயல் குறித்தும், 7 பேர் விடுதலை குறித்தும் ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.