இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில் கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.

mk stalin assembly

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்றும் இது தொடர்பான விவாதங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல, இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த தீர்மானத்தின் மூலம் கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறது. இன்றைய கூட்டத்தொடரில், முதலமைச்சர் இந்த தீர்மானத்தை முன்மொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது தமிழக மீனவர்களின் நலன் மற்றும் கச்சத்தீவு விவகாரத்தில் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அந்த தீர்மானம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டு, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்