ரூ.518 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் திட்ட பணிகள் தொடக்கம்.
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.518.17 கோடி மதிப்பீட்டில் 21 முடிவுற்ற திட்டப் பணிகளை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதன்பின்னரே கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு உதவித்தொகையும் முதலமைச்சர் வழங்கினார்.
அதுமில்லாமல் புதிய சில திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் துறையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பாக ரூ.136 கோடி மதிப்பில் புதிய திட்டமும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் சார்பாக சுமார் ரூ.309 கோடியும், நகராட்சி நிர்வாகம் இயக்குனரகதுக்கு ரூ.13 கோடி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.57 கோடி மதிப்பில் புதிய திட்டங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎஸ் நேரு, இத்துறையின் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!
March 13, 2025
“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!
March 13, 2025