ஊட்டியில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர்..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஊட்டியில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார்.
கோடை காலத்தில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாகவும், ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில், வருகிற 24-ந்தேதி வரை 5 நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் இந்த கண்காட்சி நடக்கிறது.
இந்த 124-வது மலர் கண்காட்சி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் அலங்கரிக்கப்பட்ட மலர்களை பார்வையிட்டார்.