எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம் மற்றும் புதிய பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர்.!

Published by
கெளதம்

பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் ரூ.39.90 கோடியில் கட்டப்பட்டுள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ரூ.9.70 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (8.9.2020) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் 39 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள்.

மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், 9 கோடியே 70 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 19.6.2017 அன்று சட்டப்பேரவை விதி எண் ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது.

 இதற்காக, ஒரு லட்சம் சதூ அடியில் பள்ளிக் கல்வி இயக்கத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும். இந்த கட்டடம் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவில் குறிக்கும் வகையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம்” என்ற பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதன்படி, பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில், சுமார் 122,767 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் 39 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.

இப்புதிய கட்டடத்தின் தரைதளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், முதல் தளத்தில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கக அலுவலகம், இணை இயக்குநர் அறைகள், பொது கூட்டரங்கு, இரண்டாம் தளத்தில் பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலகம், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் அறைகள், மூன்றாம் தளத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறைகள், நான்காம் தளத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் இணை உறுப்பினர் அறைகள்,பொது கூட்டரங்கு, இரண்டாம் தளத்தில் பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலகம், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் அறைகள், மூன்றாம் தளத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறைகள், நான்காம் தளத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் இணை உறுப்பினர் அறைகள், துணை இயக்குநர் அறை, உறுப்பினர்கள் அறைகள், ஐந்தாம் தளத்தில் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகங்கள், கூட்டரங்கு, ஆறாம் தளத்தில் கல்வி தொலைக்காட்சி அலுவலகம்,  கூட்டரங்கு மற்றும் அலுவலக அறைகள்ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன், மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் திரு. க.சண்முகம், இ.ஆ.ப., எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் திரு. எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப, மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.பங்கஜ் குமார் பன்சல், இ.ஆ.ப, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. எஸ். சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Published by
கெளதம்

Recent Posts

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

44 mins ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

2 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

2 hours ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

2 hours ago

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

3 hours ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

4 hours ago