ரூ.330.96 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.!

Default Image

ரூ.330.96 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ரூ.330.96 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். சென்னை, அரியலூர், தஞ்சை, ஈரோடு, தேனி, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, நாகை, திருவாரூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைத்தார். 

இதற்குமுன் இன்று நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டதால், பயிர்ப் பாதுகாப்பு பணிக்காக ரூ.54.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். மேலும் தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கில் புதிய இன மாவுப்பூச்சி தாக்குதல் ஆப்பிரிக்க நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய பூச்சி இனம் தமிழகத்திலும் தாக்குதல் நடத்துகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இதையயடுத்து நேற்று தலைமைச் செயலகத்தில், மொத்தம் ரூ.299.28 கோடி மதிப்பிலான தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புகளை திறந்து வைத்து, மனை மேம்பாட்டுத் திட்டத்தினை காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்