முதல்வர் – ஆளுநர் சந்திப்பு நிறைவு.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

Default Image

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்துள்ளதாகவும், இதில் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆளுநர்- முதல்வர் சந்திப்பு குறித்து சென்னை, கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்தோம் எனவும் கூறினார். மேலும் பேசிய அவர், அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியின் நலன் கருதியே இந்தாண்டே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையால் எதுவும் நடக்கவில்லை என தெரிவித்தார்.

திமுக ஆட்சி நடந்த 5 ஆண்டுகளில் மொத்தமாகவே 300 மருத்துவ இடங்களே உருவாக்கப்பட்டதாக பேசிய அமைச்சர், கடந்த 9 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில், புதிதாக சுமார் 3,050 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், சுகாதாரத்துறை மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்