கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் ராமநாதபுரம், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. 11 புதிய மருத்துவக் கல்லூரிக்கு மொத்தம் ரூ. 3,575 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் மத்திய அரசு தனது பங்காக 60 சதவீத நிதியையும் (ரூ. 2, 145 கோடி) , தமிழக அரசு 40 சதவீத நிதியையும் (ரூ. 1,430 கோடி) செலவிட உள்ளனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் .