சென்னைக்கு 2 நாள்கள் மட்டுமே ரயில் ,வழக்கமான ரயில்களை இயக்க வேண்டாம் – முதலமைச்சர் பழனிசாமி

Published by
Venu

கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என்று  மத்திய உள்துறை, ரயில்வே துறை அமைச்சருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

  இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ரயில்வேதுறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், ரயில்வே துறை டெல்லி- சென்னை மற்றும் சென்னை -டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் 13 ஆம் தேதியிலிருந்து இயக்கப்படும் என்று அறிவித்தது.  

பிரதமர் மோடி நேற்று  5வது முறையாக மாநில முதல்வர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தமிழ்கத்தில் வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவையை வருகின்ற 31-ஆம் தேதி வரை தொடங்காமல் இருக்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்ட காரணத்தால் வருகிற 14, 16 ஆகிய 2 தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.இவ்விரு ரயில்கள் தவிர இதர வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு டெல்லியில் இருந்து இயக்கப்படும் ராஜ்தானி ரயில் பெட்டி குளிர்சாதன வசதி கொண்டது.குளிர் சாதன வசதிகள் கொண்ட இந்த ரயில்கள் மூலமாக நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாலும், சென்னைக்கு வரும் அனைத்து  ரயில் பயணிகளையும்  பி.சி.ஆர். பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுப்ப முடியும் என்ற காரணத்தினாலும், 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் பரிசோதிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களையும் கருத்தில் கொண்டு ,இந்த ரயில்கள் மூலம் வரும் பயணிகளை ரயில்வே துறை மூலமே தனிமைப்படுத்தி வைக்கவும்,அவர்களுக்கு ஓரிரு நாளில் மாநில அரசின் மூலம் பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு , பரிசோதனை முடிவுகளை பெற்ற பின் தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைகளிலும் ,தொற்று இல்லாதவர்களை  தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை வேண்டும்.மேலும் சென்னையில் கொரோனா வைரஸ் ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோயை கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.  

 

Recent Posts

ரத்தம் சொட்ட சொட்ட மைதானத்தில் இருந்து வெளியேறிய ரச்சின் ரவீந்திரா! ஒருநாள் போட்டியில் விபரீதம்!

ரத்தம் சொட்ட சொட்ட மைதானத்தில் இருந்து வெளியேறிய ரச்சின் ரவீந்திரா! ஒருநாள் போட்டியில் விபரீதம்!

லாகூர் : பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 8)…

8 minutes ago

Live : டெல்லி அரசியல் நிலவரம் முதல்., உள்ளூர் அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி…

55 minutes ago

“தவெக-வில் பதவிக்கு காசு வாங்குறாங்க., ஆதாரம் இருக்கு” முன்னாள் பிரமுகர் பகீர் பேட்டி!

திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…

1 hour ago

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

16 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

17 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

18 hours ago