பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கணக்கிட ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 43,000 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்.இதுவரை 23,000 கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.மீதமுள்ள கருவிகள் ஒரு சில தினங்களில் வாங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Hon’ble @CMOTamilNadu ordered procurement of 43,000 Pulse Oximeter that will be used to assess the oxygen level of patients in #Covid fever clinics, care centers & wellness centers. The procurement is processed through #TNMSC. #TNGovt #Vijayabaskar pic.twitter.com/fVSe33386t
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) July 12, 2020