234 தொகுதி பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை..!
234 பேரவை தொகுதிகளுக்கான திமுக பார்வையாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஆலோசனை.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் 234 பேரவை தொகுதிகளுக்கான திமுக பார்வையாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக உறுப்பினர் சேர்க்கை, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.