எஸ்.பி.பி. மறைவுக்குதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழ்நாட்டு மக்களை தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும், “எஸ்.பி.பி’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
இந்திய இசை உலகத்திற்கு 20-ஆம் நூற்றாண்டில், இறைவன் அளித்த இனிய கொடையாக வந்து உதித்தவர் மறைந்த திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்கள். ஆயிரம் நிலவே வா” என்ற புகழ் வாய்ந்த பாடலை அவர் தான் பாட வேண்டும் என்று காத்து இருந்து வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் இதயத்தில் இடம் பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள். அன்னாரது குரலில் நேற்றும் , இன்றும், நாளையும் ஒலிக்கும் ‘தங்கத் தாரகையே வருக வருக தமிழ் மண்ணின் தேவதையே வருக வருக” என்ற மாண்புமிகு புரட்சித்தலைவியின் புகழ் பாடும் பாடல், கழகத்தின் வரலாற்றில் என்றும் இணைந்திருக்கும்.
திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் கடவுள் மீது பக்தி கொண்டு “கந்த சஷ்டி கவசம்” மற்றும் “ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில்”, போன்ற பல பாடல்கள் உள்ளம் உருக பாடி, பக்தர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களின் குரல் இனிமைக்கு நிகர் அவரே. இவர் மிக அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்து, புகழின் உச்சிக்கே சென்றவர். இவர் பாடகர், நடிகர், பின்னணி குரல் இசையமைப்பாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர் என தெரிவித்துள்ளார்.
சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…
கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது…
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…