மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை என டிடிவி தினகரன் குற்றசாட்டு.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ஆட்சியைப் பிடிப்பதற்காக ஸ்டாலின் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் சேவை செய்வதற்கான FMG தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர்வதற்கான வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக கடந்த ஜுலை மாதம் மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை. எத்தனையோ வாக்குறுதிகளைப் போல தி.மு.க.வினர் இதனையும் காற்றில் பறக்கவிட்டுவிடுவார்களோ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…