ஆப்பிள், சாம்சங், அமேசான் உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு.!
புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் – முதல்வர் பழனிசாமி கடிதம்.
ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி உள்ளிட்ட 13 தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்தது நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். பல நிறுவனங்களுடன் ஏற்கனவே ரூ.15,128 கோடியில் ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் சாதகமான அம்சங்களை குறிப்பிட்டு முதல்வர் பழனிசாமி கடிதத்தை அனுப்பியுள்ளார். மேலும் நிறுவனங்களில் தேவைக்கேற்ப ஊக்க சலுகைகைளை அரசு வழங்கிடும் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.