அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் -முதலமைச்சருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#CoronaVirus பேரிடரை போர்க்கால அடிப்படையில் சந்திக்க, ஆளுங்கட்சி – எதிர்கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராட வேண்டும்!
இப்பேரிடரை ஜனநாயக முறையில் எதிர்கொள்ள, @CMOTamilNadu அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். pic.twitter.com/MWRuBg7wTl
— M.K.Stalin (@mkstalin) March 28, 2020
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கொரோனா நோய்த் தடுப்பில் மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து நடவடிக்கைகள் எடுக்க காணெலி மூலம் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் . கொரோனா பேரிடரை ஆளுங்கட்சி மட்டும் தனித்து நின்று துடைத்துவிட முடியாது
அனைத்துக் கட்சிகளும் ஒரே நோக்குடன் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டிய தருணம் இது. மக்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான இந்தப் பணியில் ஆளுங்கட்சி மட்டுமின்றி அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஈடுபடுவதுதான் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.