‘777 சார்லி’ படத்தை திரையரங்கில் பார்த்து தேம்பி..,தேம்பி அழுத கர்நாடக முதல்வர்.!
‘777 சார்லி’ என்ற கன்னடத் திரைப்படம் கடந்த ஜூன் 10ஆம் தேதி ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஒரு மனிதனுக்கும் அவனது நாய்க்கும் இடையிலான பிணைப்பைக் கொண்டியிருக்கும் இந்த படம் அனைத்து இடங்களிலும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருவதால், பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ரக்ஷித் ஷெட்டி நடித்த இப்படம் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது பணிகளில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு பெங்களூரு ஓரியன் மாலில் ‘777 சார்லி’ படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்துள்ளார்.
அந்த வகையில், படத்தை பார்த்துவிட்டு பசவராஜ் பொம்மை தன்னுடைய உயிரிழந்து போன நாயை நினைத்துக் கண்ணீரை அடக்க முடியமால் அழுதிருக்கிறார்.
திரையரங்கை விட்டு வெளியேறிய முதலவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் இந்தப் படத்தை மிகவும் நேசித்து தயாரிப்பாளர்களைப் பாராட்டினார், மேலும் அனைவரையும் பார்க்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்களேன் – அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி கேட்கும் ராஜேந்திர பாலாஜி!
முதல்வர் பசவராஜ் பொம்மை ஒரு நாய் பிரியராம். கடந்த ஆண்டு தனது செல்ல நாய் இறந்ததால் அவர் இந்த படத்தை பார்த்துவிட்டு மனம் உடைந்து போய் அழுது விட்டாராம்.
இதற்கிடையில், ‘777 சார்லி’ 2022 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த கன்னடப் படமாக மாற உள்ளது, ஏனெனில் அது வெளியான முதல் வாரத்திலேயே 25 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.