நிவர் புயல்: “உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்”- முதல்வர் அறிவிப்பு!

நிவர் புயல் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், கடந்த 28 ஆம் தேதி முழுமையாக கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக பல மாவட்டங்களில் பலத்த காற்று வீசி, கனமழை பெய்தது. இந்த நிவர் புயல் நிவர் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிவர் புயலின்போது உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும், பயிர் சேதாரம் கணக்கிடப்பட்டு, பேரிடர் நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும், சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி பாதிப்பு ஏற்படுவதை தடுக்க உரிய திட்டங்கள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.