முதல்வர் எடப்பாடி குரங்கணி தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவு!

Published by
Venu

அரசு  குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.முதல்வர்  எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேனி மாவட்டம், போடி வட்டம், குரங்கணி மலைப்பகுதியில், 11-ந் தேதியன்று கொழுக்குமலை கிராமத்தில் இருந்து குரங்கணி கிராமம் நோக்கி கீழிறங்கிக்கொண்டிருந்த, மலையேற்றம் சென்ற 36 நபர்கள் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக்கொண்டனர். இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் மனவேதனை அடைந்தேன்.

இந்த கொடிய விபத்து பற்றிய செய்தி அறிந்தவுடன், மலைப்பகுதியில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். எனது வேண்டுகோளுக்கு இணங்க துணை முதல்-அமைச்சர், வனத்துறை அமைச்சர், வனத்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வன அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

தீயணைப்புத் துறை, வனத்துறை, வருவாய்த் துறை, காவல் துறையினர் ஆகியோர் தேவையான உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதில் 26 நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்  தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று ஹெலிகாப்டர் மற்றும் கமாண்டோ படையினரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவ துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன். காட்டுத்தீயில் சிக்கியவர்களில் பத்து நபர்கள் துரதிருஷ்டவசமாக உயிர் இழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவும், வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் மலை ஏற்றத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிர் இழந்த பத்து நபர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்தும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அறிக்கையில் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

2 hours ago

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

3 hours ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

4 hours ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

5 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

6 hours ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

6 hours ago