23 மாவட்டங்களில் துணிக்கடைகள், நகைக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்று ( 28-6-2021) முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பொதுமக்கள், வணிக அமைப்புகள் ஆகியோரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் கருத்துக்கள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு பின்வரும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை இராமநாதபுரம் இராணிப்பேட்டை சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி ,விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், துணிக்கடைகள், நகைக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதி இன்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்படி புதிய தளர்வுகளை அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…