ஆட்டிறைச்சி கடைகள் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை மூடல் .!

Default Image

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது.  ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதனால் நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் இந்தியாவில் தற்போது நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1834 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது .

ஆனால் பொதுமக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக விலகலை கடைபிடிக்காமல் இறைச்சிக்கடைகளில் இறைச்சி வாங்கியதாக புகார் எழுந்தது.இந்நிலையில் மதுரையில் ஆட்டிறைச்சி கடைகள் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை மூடப்படவுள்ளது. 

கொரோனாவில் இருந்து மக்களை காக்க மதுரையில் உள்ள 400 ஆட்டிறைச்சி கடைகளும் வருகின்ற 14-ம் தேதி வரை மூடப்படுகிறது என மதுரை ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்க தலைவர் முத்து கிருஷ்ணன் தகவல்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்