நேற்று சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் சுங்கச்சாவடியில் திருச்சி சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு , சுங்கச்சாவடி ஊழியருக்கு இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அப்போது அந்த அரசு பேருந்து ஓட்டுநரையும் , நடத்துநரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் பேருந்தை சுங்கச்சாவடிக்கு குறுக்கே நிறுத்தி உள்ளார்.இதைத்தொடர்ந்து அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கோவத்தில் சுங்கச்சாவடியில் இருந்த கணினி உள்ளிட்ட மின்சாதன பொருள்களை அடித்து நொறுக்கினர்.இதைத்தொடர்ந்து வாகனங்களுக்கு கட்டண வசூல் வசூலிக்காமல் இலவசமாக செல்ல அனுமதித்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவர் , கண்டக்டர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் என 4 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர்.இந்நிலையில் சுங்கச்சாவடி முழுவதும் சூறையாடப்பட்டதால் சேதம் அடைந்த பொருட்களை மாற்றி சரிசெய்ய ஒருவார காலம் ஆகும் என கூறப்படுகிறது.
இதனால் சுங்கச்சாவடியில் இரண்டாவது நாளாக கட்டணம் இல்லாமல் வாகனங்கள் செல்கின்றனர்.
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…