இந்த தேர்தலோடு திமுகவுக்கு மூடுவிழா நடத்தப்படும் – பரப்புரையில் முதல்வர் பேச்சு

Default Image

நான் உழைத்து அரசியலுக்கு வந்துள்ளேன், ஸ்டாலின் போல் எந்த உழைப்பும் இல்லாமல் பொறுப்புக்கு வரவில்லை என பரப்புரையில் முதல்வர் பேசியுள்ளார்.

தருமபுரி, பாலக்கோட்டில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.அன்பழகனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், இது வரும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் கூட்டம் அல்ல, வெற்றி விழா கூட்டம்போல் காட்சியளிக்கிறது. இவ்வளவு மக்கள் சக்தி பெற்ற கட்சியை தொடர்ந்து தரக்குறைவாக ஸ்டாலின் பேசி வருகிறார் என குற்றசாட்டியுள்ளார்.

இந்த தேர்தலோடு திமுகவிற்கு மூடுவிழா நடத்தப்படும். இது திமுகவின் இறுதி தேர்தலாக இருக்க வேண்டும். ஒரு கட்சியின் தலைவர் அனைவரையும் மதிக்க வேண்டும், மற்றவர்களை இகழ்ந்து பேசுவது, சிறுமைப்படுத்தி பேசுவது, கேவலப்படுத்தி பேசுவது என்பது அழகல்ல, கிடைக்காதவர்களுக்கு பதவி கிடைத்துள்ளது. அதனால் இப்படி பேசி வருகிறார் என விமர்சித்துள்ளார்.

ஆகவே, மு.க.ஸ்டாலின் பண்போடு நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை மதிக்க தெரிந்து கொள்ளுங்கள். யார் மற்றவர்களை மதிக்கிறார்களோ, அவர்கள்தான் ஏற்றம் பெறுவார்கள். அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைவரையும் மதிக்கக்கூடிய கட்சி, அதனால்தான் தொடர்ந்து நாங்கள் ஏற்றது கண்டு வருகிறோம். நான் உழைத்து ஒவ்வொரு பொறுப்புக்கு வந்த பிறகு தான் இந்த இடத்திற்கு வந்தவன், ஸ்டாலின் எந்த உழைப்பில் வந்துள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கருணாநிதியின் செல்வாக்கில்தான் தற்போது ஸ்டாலின் வந்துள்ளார். கலைஞரே ஸ்டாலினை நம்பவில்லை, உண்மையில் ஸ்டாலின் மீது நம்பிக்கை இருந்தால், கலைஞர் உடல்நலம் குறைவு இருக்கும்போதே திமுக தலைவர் பொறுப்பு கொடுத்திருப்பார். ஸ்டாலினுக்கு திறமை இல்லை அதனால்தான் கொடுக்கவில்லை என்றும் என்றைக்கும் உழைப்பு, உயர்வை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்