முதலமைச்சர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு கூட்டம் தொடங்கியது!

Default Image

காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவரான முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது. 

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் குழுவின் தலைவரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. தலைமை செயலக கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, சவுமியா சாமிநாதன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

பாதிப்புகளை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது. காற்று மாசுபாட்டை குறைப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சுற்றுசூழலை மேம்படுத்துதல், காடுகளின் பரப்பளவை அதிகரித்தல் ஆகியவை பற்றியும் ஆலோசனை நடத்த உள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்