காலமாற்றம் என்பது அரசாங்கம் மட்டுமே தீர்த்துவிடக்கூடிய பிரச்சனை அல்ல என காலநிலை உச்சி மாநாட்டில் முதலமைச்சர் உரை.
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில், சுற்றுசூழல் காலநிலை மாற்றத்திற்கான ஆவணத்தை வெளியிட்டு, காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்.
காலநிலை மாற்றம் என்பது இந்தியாவுக்கான பிரச்சனை மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சனை. ஐ.நா.வாக இருந்தாலும், உலகின் பல நாடுகளாக இருந்தாலும் அனைவரது கவலையும் காலநிலை மாற்ற பிரச்சனைகளில் தான். காலமாற்றம் என்பது அரசாங்கம் மட்டுமே தீர்த்துவிடக்கூடிய பிரச்சனை அல்ல.
இயற்கையை காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. மானுடத்தின் முக்கிய பிரச்சனையாக காலநிலை மாற்றம் இருக்கிறது. காலநிலை மாற்றத்தை தமிழ்நாடு அரசு மிக முக்கிய பிரச்சனையாக கருதுகிறது. சூழலை போற்ற வேண்டியதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தியது தமிழ் சமூகம்.
மேலும் முதல்வர் பேசுகையில், பசுமை திட்டங்களுக்கான அனுமதி ஒற்றை சாளரம் முறையில் வழங்கப்படும். பசுமை நிதியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பை தடுக்க கடற்கரை ஓரம் பனை மரங்களை நடும் திட்டம் தொடங்கப்படும். நாட்டில் வேறு எந்த மாநில அரசும் முன்னெடுக்காத நடவடிக்கைகளை திராவிட மாடல் அரசு முன்னெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…