காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை – முதலமைச்சர் ஸ்டாலின்

Default Image

காலமாற்றம் என்பது அரசாங்கம் மட்டுமே தீர்த்துவிடக்கூடிய பிரச்சனை அல்ல என காலநிலை உச்சி மாநாட்டில் முதலமைச்சர் உரை.

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில், சுற்றுசூழல் காலநிலை மாற்றத்திற்கான ஆவணத்தை வெளியிட்டு, காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்.

காலநிலை மாற்றம் என்பது இந்தியாவுக்கான பிரச்சனை மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சனை. ஐ.நா.வாக இருந்தாலும், உலகின் பல நாடுகளாக இருந்தாலும் அனைவரது கவலையும் காலநிலை மாற்ற பிரச்சனைகளில் தான். காலமாற்றம் என்பது அரசாங்கம் மட்டுமே தீர்த்துவிடக்கூடிய பிரச்சனை அல்ல.

இயற்கையை காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. மானுடத்தின் முக்கிய பிரச்சனையாக காலநிலை மாற்றம் இருக்கிறது. காலநிலை மாற்றத்தை தமிழ்நாடு அரசு மிக முக்கிய பிரச்சனையாக கருதுகிறது. சூழலை போற்ற வேண்டியதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தியது தமிழ் சமூகம்.

மேலும் முதல்வர் பேசுகையில், பசுமை திட்டங்களுக்கான அனுமதி ஒற்றை சாளரம் முறையில் வழங்கப்படும். பசுமை நிதியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பை தடுக்க கடற்கரை ஓரம் பனை மரங்களை நடும் திட்டம் தொடங்கப்படும்.  நாட்டில் வேறு எந்த மாநில அரசும் முன்னெடுக்காத நடவடிக்கைகளை திராவிட மாடல் அரசு முன்னெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்