மருத்துவமனையை சுத்தம் செய்யும் பணி.! 28 மாணவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு.!
- பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் 28 மாணவர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டனர். இதையடுத்து நீதிமன்றம் வித்தியாசமான தண்டனையை அளித்துள்ளது.
திருச்சி பிராட்டியூரில் உள்ள ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் 3 மற்றும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பல மாணவர்கள் காயமடைந்தனர். ஆசிரியர்கள் தடுத்தும் இந்த மோதல் நடைபெற்றதால் கல்லூரியில் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் இந்த மோதலுக்கு காரணமான 28 மாணவர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மதுரைக்கிளை, அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எப்.ஐ.ஆரை ரத்து செய்ததோடு, திருச்சி அரசு மருத்துவமனையை ஒருநாள் சுத்தம் செய்யவும் உத்தரவிட்டது. அதன்படி 28 மாணவர்களும் அரசு மருத்துவமனைக்கு வந்து, வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும், இலை சருகுகளையும் சுத்தப்படுத்தியதோடு, பொது வார்டையும் சுத்தப்படுத்தினர். இதனிடையே நீதிமன்றம் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதுபோன்று வித்தியாசமான தண்டனையை கொடுத்ததுக்கு பலதரப்பு மக்களிடம் இருந்து பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.