கரூர் மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்.!
கரூர் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வரும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர்அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.கடந்த மார்ச் மாதம் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் ,தற்போது தற்போது வேறு நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திற்க்கான சம்பள தொகை அவர்களுக்கு வழங்கப்படவில்லை.இது தொடர்பாக நிர்வாகத்திடம் கேட்டபோது 5-ஆம் தேதி,10 -ஆம் தேதி என்று இழுத்துக்கொண்டே சென்றுள்ளனர்.எனவே இன்று தூய்மை பணியாளர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு சமூக இடைவெளி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி இன்று மாலைக்குள் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.பின்னர் பணியாளர்களின் போராட்டம் நிறைவு பெற்றது.