“அலுவலகங்களைச் சுத்தம் செய்யுங்கள்”2 வாரங்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு..!!
மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களைச் சுத்தம் செய்யும் பணியில் அடுத்த 2 வாரங்களுக்கு ஈடுபட வேண்டும் என்று பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
தூய்மையே உண்மையான சேவை திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 15-ம் தேதி தொடங்கினார். வருகிற 2ந் தேதி வரை நடைபெறும் இந்த இயக்கத்தின் நோக்கம், சுகாதாரப்பணியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களையும் பணியில் ஈடுபடச் செய்வதாகும்.
இந்நிலையில், மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும், அமைச்சகங்களிலும் பணியாற்றும் ஊழியர்களும், அதிகாரிகளும் தினமும் 6 மணி நேரம் சுகாதாரப் பணியில் ஈடுபட வேண்டும் என சுற்றறிக்கை மூலம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
DINASUVADU