செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தமிழ்நாட்டிலேயே இயங்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தனி அமைப்பாக செயல்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன், செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், கர்நாடக மாநிலத்துக்குச் செல்ல உள்ளதாகவும், அதனைத் தமிழகத்திலேயே இருக்கச் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தனி அமைப்பாகச் செயல்பட, பெரும்பாக்கத்தில் கட்டுமானம் நடைபெற்று வருவதாகவும், அதை முதல்வர் விரைவில் திறந்துவைப்பார் என்றும் தெரிவித்தார்.