ஜன.22 ஆம் தேதி இவர்களுக்கு ‘செம்மொழித் தமிழ் விருது’ – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

Default Image

சென்னை:2010 முதல் 2019 வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்களுக்கு வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதியன்று விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளையின் சார்பில் 2010 முதல் 2019 வரையிலான “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளுக்கான” விருதாளர்கள் பட்டியல் கடந்த ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி,விருதுத் தேர்வுக்குழுவினரால் கீழ்க்காணும் பத்து விருதாளர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள்:

  1. 2010- முனைவர் வீ.எஸ். இராஜம், (Former Senior Lecturer, Department of South Asia Regional Studies, University of Pennsylvania).
  2. 2011 – பேராசிரியர் பொன், கோதண்டராமன் (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)
  3. 2012- பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி (மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்)
  4. 2013 – பேராசிரியர் ப. மருதநாயகம் (மேனாள்இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், மேனாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்)
  5. 2014 – பேராசிரியர் கு. மோகனராசு (மேனாள்பேராசிரியர்&தலைவர். திருக்குறள்ஆய்வுமையம், சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை)
  6. 2015- பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (மேனாள்தமிழ்ப்பேராசிரியர். மாநிலக்கல்லூரி)
  7. 2016 – பேராசிரியர் கா. ராஜன் (மேனாள் பேராசிரியர், வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்),
  8. 2017 – பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், Professor and Head of the Institute of Indology and Tamil Studies, Cologne University, Germany.
  9. 2018 கவிஞர் ஈரோடு தமிழன்பன் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை).
  10. 2019 -பேராசிரியர் கு.சிவமணி (மேனாள்முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை).

இதனையடுத்து,தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்நாட்டு பெருமக்களின் முன்னிலையில் மாநில அளவிலான தமிழ்மொழி சார்ந்த விழாவில் கூடிய விரைவில் இவர்களுக்கு விருது வழங்கப்படும் என்று அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,2010 முதல் 2019 வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்களுக்கு வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதியன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ள விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்,இன்று ஆய்வு செய்து செம்மொழி நிறுவனத்தின் புதிய நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் அவர்கள்,செம்மொழி நிறுவன ஆய்வுசார் பணிகள் குறித்து கேட்டறிந்து,ஆலோசனை வழங்கிய பின்னர் விருது குறித்த தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்