பத்தாம் வகுப்பு மாணவர்களே! வரும் 18ம் தேதி முதல் “ஒரிஜினல்” சான்றிதழ்கள் – தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான செய்திக்குறிப்பில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் 18ம் தேதி காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் வரும் ஆக.18ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.