12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்-அன்பில் மகேஸ்..!
மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டியதுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து அதிகரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு குறித்து நாளையும், நாளை மறுநாளும் ஆலோசனை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டியதுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவு எடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.