12ம் வகுப்பு பொதுத்தேர்வு – கட்டணம் அறிவிப்பு
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு 225 ரூபாயும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மதியம் முதல் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை பெற்று www.dge1.tn.gov.in என்ற தேர்வுகள் துறை இணையதளத்தில் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.