10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற 10 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற 10 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.10-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு , tnresults.nic.in, dge1.tn.nic.in dge2.tn.nic.inஆகிய இணையதளங்களிலும், SMS மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்பிற்குப் பதிலாக ,மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின் வருகின்ற 17 ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான நாட்களில் பயின்ற பள்ளியின் வாயிலாக அரசுத் தேர்வுத்துறை படிவத்தினை பூர்த்தி செய்து, பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக அரசுத் தேர்வுத் துறை இணைய தளம் ( http://www.dge.tn.gov.in/) மூலம் விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
என்றும் ஆகஸ்ட் 17 முதல் முதல் 25-ஆம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…