மதிப்பெண் அடிப்படையிலே 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் -அமைச்சர் செங்கோட்டையன்

மதிப்பெண் அடிப்படையிலே 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள், வழக்கம் போல் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. அதில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளார்
கிரேடு முறையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வழங்கப்படலாம் என்று வெளியான செய்திகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025