கடலூர் அ.தி.மு.கவினரும் இடையே கோஷ்டி மோதல் – இருவர் கொலை!

அரசியலில் வெவ்வேறு கட்சிகள் இருப்பதும், அந்த வெவ்வேறு கட்சிகள் இடையே பிரச்சினை எழும்புவது வழக்கம். ஆனால் தற்போது கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியில் அதிமுக கட்சியை இரண்டு பிரிவுகளாக இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த இரு பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதாகவும் இவர்கள் இருவர் மீதும் ஏகப்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் இருப்பதாகவும் செய்கின்றதாம்.
இந்நிலையில், இந்த இரு தரப்பினருக்கும் அன்மையில் மோதல் முற்றி உள்ளது. இதனை தொடர்ந்து திருவதிகை என்னும் பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் மணிகண்டன் ஆகியோர் முற்றிய மோதலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அந்தப் பகுதி மக்களிடையே தற்போது மிகவும் பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பிற்காக காவல்துறையினரை குவித்துள்ளனர்.