அதிமுக அலுவலகம் அருகே மோதல் – 400 பேர் மீது வழக்குப்பதிவு..!
அதிமுக அலுவலகம் அருகே மோதலில் ஈடுபட்ட 400 பேர் மீது ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு.
அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டதனால் பெருபதற்றம் நிலவிய நிலையில்,தலைமை அலுவலகம் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றனர்.
,அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் வந்த பிரச்சார வாகனத்தில் ஏற்றினர். அதன்பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மேலும்,அதிமுக தலைமை அலுவலகம் பகுதியை சுற்றிலும் சட்டவிரோதமாக கூடக் கூடாது என 145 தடை உத்தரவு கோட்டாட்சியாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும், ஓபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.