இபிஎஸ் வருகையின் போது புறவழிச்சாலையில் மின்விளக்குகள் எரியாததை கண்டித்து திமுகவினர்- அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளை நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பார்வையிட்டு மீண்டும் சென்னை திரும்புகையில், பொன்னேரி புறவழி சாலையில் அதிமுகவினர் இபிஎஸ்-ஐ வரவேற்க நின்றுள்ளனர். அப்போது தெரு மின் விளக்குகள் எரியவில்லை என தெரிகிறது. இதனால் அதிமுகவினர், திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் வருகையில் மட்டும் அனைத்து விளக்குகளும் எரிகிறது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி வருகையில் எந்த விளக்கும் எரியவில்லை என குற்றம் சாட்டினார். இதில் வாக்குவாதம் முற்றி அதிமுக- திமுக கட்சியினர் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்பு மின் விளக்குகள் எரியாததை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விருத்தாச்சலம் – சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் – சேலம் செல்லும் புறவழிச் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…