காங்கிரஸ் – பாஜக இடையே மோதல் – 13 பேர் அதிரடி கைது!
காங்கிரஸ், பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து 13 பேர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் காங்கிரஸ். பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த 2 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர் உட்பட 13 பேர் மீது எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைத செய்தது காவல்துறை. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபடுவதைப் பார்த்து, அலுவலகத்தில் இருந்த பாஜக நிர்வாகிகள், கட்சி அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தாதீர்கள், வேறு இடத்துக்கு செல்லுங்கள் என கூறியதை அடுத்து, இதனால் இரு தரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் பரபரப்பான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.