உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கிடையே தகராறு 3 பேருக்கு அருவாள் வெட்டு ஒருவர் உயிரிழப்பு.!

Default Image
  • ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
  • அதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தகராறில் ஒருவர் உயிரிழந்தார், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவரான மாசானசாமி என்பவரின் மனைவி லதா ஆட்டோ ரிக்சா சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இளையராஜா என்பவர் கை உருளை சின்னத்தில் போட்டியிட்டார்.

பின்னர் இவர்களுக்குள் வேட்பு மனு பரிசீலனையின் போது முரண்பாடாக இருந்தாக கூறப்படும் நிலையில், வாக்குப்பதிவின் போது மேட்டூர் வாக்குச்சாவடியில் இளையராஜாவின் ஆதரவாளர்கள் சிலர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தகராறில் முடிந்ததது. அப்போது வாக்குச்சாவடிக்கு அருகே நின்றுக் கொண்டிருந்த மாசானசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களான ஜேசு மற்றும் ராமசாமி ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டனர். இதில் வெட்டுக்காயம் அடைந்த மூவரும் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே இளையராஜாவின் ஆதரவாளரான மாரியப்பன் என்பவரை தூத்துக்குடி வடக்கு பரம்பு பகுதியில் சுற்றி வளைத்த சிலர் அவரை கல்லால் சரமாரியாக தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். மாரியப்பனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மோதலால் அப்பகுதியே போர்களமாக காணப்பட்டது. ஒட்டப்பிடாரம் பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்