தெளிவாகவும் தன்னம்பிக்கையடனும் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது-சிதம்பரம் பாராட்டு
பீலா ராஜேஷ் தெளிவாகவும் தன்னம்பிக்கையடனும் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கு இடையில் தினசரி நிலவரங்களை குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.அந்த வகையில் இன்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , தமிழகத்தில் இன்று 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில் ,தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளர் தெளிவாகவும் தன்னம்பிக்கையடனும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளர் தெளிவாகவும் தன்னம்பிக்கையடனும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது!
— P. Chidambaram (@PChidambaram_IN) April 4, 2020