மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சி.கே.குமரவேல் விலகினார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்தித்தது. அதிலும், கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார்.
சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தொடர்ந்து, சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், பொதுசெயலாளர் சந்தோஷ் பாபு , சுற்றுசூழல் பிரிவு மாநில செயலாளராக இருந்த பத்மபிரியா உள்ளிட்ட பலர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதற்கிடையில், நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 2,200 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்திலிருந்து சி.கே.குமரவேல் விலகினார். இதுகுறித்து சி.கே.குமரவேல் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற அதற்கு கமலின் அரசியல் ஆலோசகர்களும், அவர்களது தவறான வழிநடத்தல் காரணம். 233 தொகுதிகள் போனாலும் பரவாயில்லை ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என கமல் நினைத்தார்.
தலைவருக்கான தகுதியை கமலஹாசன் இறந்துவிட்டார் என தெரிவித்தார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…