#BREAKING: அடிமேல் அடி.., மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சி.கே.குமரவேல் விலகல்..!

Default Image

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சி.கே.குமரவேல் விலகினார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்தித்தது. அதிலும், கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார்.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தொடர்ந்து, சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், பொதுசெயலாளர் சந்தோஷ் பாபு , சுற்றுசூழல் பிரிவு மாநில செயலாளராக இருந்த பத்மபிரியா உள்ளிட்ட பலர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதற்கிடையில், நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 2,200 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்திலிருந்து சி.கே.குமரவேல் விலகினார். இதுகுறித்து சி.கே.குமரவேல் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்  ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற அதற்கு கமலின் அரசியல் ஆலோசகர்களும், அவர்களது தவறான வழிநடத்தல் காரணம். 233 தொகுதிகள் போனாலும் பரவாயில்லை ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என கமல் நினைத்தார்.

தலைவருக்கான தகுதியை கமலஹாசன் இறந்துவிட்டார் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்