அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை – சிஐடியு சவுந்தரராஜன்

CITU Soundararajan

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்களில் பணிமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கைது செய்யப்படும் வருகின்றனர். இந்த சூழலில் செய்தியாளர் சந்திப்பில் சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது, தமிழக அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை.

அரசுப் பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு இயக்கப்படுகிறது. அதாவது, முறையாக பயிற்சி பெறாதவர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிதிச்சுமை என்பதை காரணமாக சொல்ல முடியாது. தாங்கள் முன்வைத்த எந்தகோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை, அதில், எந்தவித முன்னேற்றமும் இல்லை. பழைய ஓய்வூதியம் உள்பட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கைது!

மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் பேசி வருகிறார். தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்ற பொய் தோற்றத்தை அரசு ஏற்படுத்த முயற்சிக்கிறது. சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம். கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஓய்வு பெற்றவர்களின் பஞ்சப்படியை நிதிச் சுமையை காரணம் சொல்லாமல் தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், காலிப் பணி இடங்களை நிரப்பாமல் இருப்பதால் தான் நேற்று 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்றும் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியே பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்