CITU தொழிலாளர்கள் 8வது நாளாக போராட்டம்..!!
கோவை:
மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு உட்பட்ட பஞ்சாலைகள் கோவையில் 5 இடங்களிலும் காளையார் கோவில், கமுதக்குடி ஆகிய இடங்களில் தலா ஒரு ஆலை என மொத்தம் 7 ஆலைகள் இயங்கி வருகின்றன.
இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளார்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து தொழிற்சங்கத்தினர் கடந்த 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 8-வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கையை வலியுறுத்தி தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ. பத்மநாபன், எல்.பி.எப். பார்த்தசாரதி, ஐ.என்.டி.யூ.சி. கோவை செல்வன், சீனிவாசன், ஏ.டி.பி. தனகோபாலன் ஆகியோர் தலைமையில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சி.எஸ்.அன்ட் டபிள்யூ மில் முன்பு கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினர்.
தொழிலாளர்கள் போராட்டம் தொடர்வதால் உற்பத்தி முற்றிலும் முடங்கி உள்ளது.
DINASUVADU