குடியுரிமை சட்டத்தால் எந்த மதத்தினருக்கும் பாதிப்பு இல்லை – முதலமைச்சர் பழனிசாமி
- குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
- குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த மதத்தினருக்கும் பாதிப்பு இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து தமிழக அரசின் நிலைபாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர் கூறுகையில், குடியுரிமை சட்டம் குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்தி விட்டது.குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த மதத்தினருக்கும் பாதிப்பு இல்லை.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை அளிக்கவேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு, இதுகுறித்து பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தினர்.
இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்ததை நம்பி ஈழத்தமிழர்கள் உயிர்நீத்தனர் .இலங்கை தமிழர்கள் குறித்துபேச திமுகவுக்கு தகுதி கிடையாது.கொறடா உத்தரவின்படி தான் அதிமுக எம்பிக்கள் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிவித்தார்.