குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம் – கமல்ஹாசன் அறிக்கை
- நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் 295 எம்பிக்கள் ஆதரவாகவும் ,83 எம்பிக்கள் எதிராக வாக்களித்தனர்.ஆனால் இதன் பின்னர் நடைபெற்ற விவாதம் சுமார் 7 மணி நேரத்திற்க்கும் மேலாக நடைபெற்றது.எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசின் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,இந்தியாவை ஒருசாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை.அரசியலமைப்பு சட்டத்தில் பிழை இருப்பின் திருத்தும் கடமை நமக்கு உள்ளது, ஆனால் பிழை இல்லா நல் அமைப்பை திருத்த முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம் என்று தெரிவித்துள்ளார்.