குடியுரிமை திருத்தச் சட்டம் – இஸ்லாமியர்களுடன் தமிழக அரசு ஆலோசனை
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான கூட்டம் தொடங்கியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வரப்பட்டது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க சிறப்புக் கூட்டதிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்தது.இஸ்லாமிய தலைவர்கள் நேரில் கலந்து ஆலோசிக்க ,இன்று மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அறிவித்தார் .இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.இதனால் 40-க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.இந்த கூட்டத்தில், தலைமை காஜி சலாவுதீன் ,ஹஜ் கமிட்டியின் அபு பக்கர்,மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா,டிஜிபி, காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.