குடியுரிமை திருத்த சட்டம் : அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அப்பொழுது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டது.
அப்பொழுது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இஸ்லாமிய அமைப்பினருடன் தலைமைச் செயலாளர் பேசியது என்ன ? என்று கேள்வி எழுப்பினார். இஸ்லாமியர்களுடன் தலைமைச் செயலாளர் என்ன பேசினார் என்பதை விளக்க வேண்டும் என்று தெரிவித்தார்.குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.